விசுவாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப“ படத்தில் அஜித் இரண்டு வித கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது நரைத்த தாடி மற்றும் தலைமுடியுடன் நடித்து வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களா? அல்லது இரண்டு வித கெட்டப்பா? என்பது மட்டும் இன்னும் தெரியாமல் உள்ளது..

வயதான தோற்றத்து அஜித்துக்கு நயன்தாராவும், இளமையான தோற்றத்துக்கு ஜோடியாக இன்னும் ஒரு பிரபல நடிகையும் நடிக்கவுள்ளனர்.

டி.இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து வருகின்றனர். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close