விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் விபத்து நடந்துள்ளது.

விபத்தில் 28 மற்றும் 21 வயதான இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 21 வயதுடைய இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த இளைளுன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like