விமான நிலையம் மீது தாக்குதல்- 9 பேர் காயம்!!

சவுதி அரேபியாவின் அபஹா சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று சவுதி படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபப்ட்டு, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும், தாக்குதல் தொடர்பில் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்றும் படைகளின் பேச்சாளர் கேணல் ரேக்கி அல் மலிக் தெரிவித்துள்ளார்.

You might also like