வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்!!

மன்னாருக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அதிகமாக பாதிப்புக்குள்ளான மக்களை விடுத்து பாரபட்சமான முறையில் வீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது என்று மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் நேசக்கரம் பிரஜைகள் குழு தலைவர் பி.எஸ்.அன்ரன் ஜெரோம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

வீட்டுத் திட்டம் புள்ளி அடிப்படையிலும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் உண்மையில் நீண்ட காலமாக மிகவும் பாதிப்படைந்த நிலையில் வீடுகளை அமைக்க முடியாத மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்கள் அதிகமானோர் மன்னார் மாவட்டத்தில் உள்ளனர்.

பல குடும்பங்கள் கடன் சுமையாலும் தொழில் இன்றியும் சரியான ஒரு வீட்டு வசதிகள் அற்ற நிலையிலும் உள்ளனர்.

ஆகவே மன்னார் மாவட்டத்தில் புள்ளி அடிப்படையில் வீடுகள் வழங்குவதில் ஒரு புறமிருக்க மிகவும் வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களை இனம் கண்டு அவர்களுக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான சரியான செலவுத் தொகையும் வழங்கப்பட வேண்டும்.

ஒரு வீட்டுத்திட்டத்தை வழங்கும் போது அதற்கான மதிப்பீடு செய்யப்படும் தொகையையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

You might also like