வெளிநாட்டு முகவர்களை நம்பியவர் காட்டுக்குள் சடலமாக!!

வெளிநாட்டு முகவர்களை நம்பி, நண்பர்களுடன் அமெரிக்க சென்றவர் கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில், இறந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதும், சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

காடுகள் மலைகளைக் கடந்து பல நாள் பயணங்கள் சென்ற வேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கிய நிலையில் நோய்வாய்ப்பட்டு சதுப்பு நிலக் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு அவர் இறந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை உறவுவினர்கள் அடையாளம் காணுமாறு கோரி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

You might also like