119 ஆவது மாதிரிக் கிராமம் -திருகோணமலையில்!!

0 11

திருகோணமலை மாவட்டத்தின் கப்பல்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சஹஜீவனபுர 119 ஆவது மாதிரிக்கிராமம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நாளை பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், துரைரட்ணசிங்கம்,எம்.எஸ்.தௌபீக், அப்துல்லா மஹ்ரூப், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம உட்பட பலரும் கலந்து கொள்வர்.

You might also like