4 மாடிக் கட்டடம் இடிந்ததில்- உயிருடன் புதைந்த 55 பேர்!!

4 மாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து வீழ்ந்து அதில் சிக்கிய 55 பேர் உயிரோடு புதைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவம் இந்தியா மும்பையில் உள்ள டோங்கிரியில் நடந்துள்ளது.

100 ஆண்டுகள் பழமையான கட்டடமே இடிந்து வீழ்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

You might also like