52 மத ஸ்தலங்களைப் புனரமைக்க நிதி பகிர்ந்தளிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள 52 மத ஸ்தலங்களின் புனரமைப்புக்காக கம்பெரலிய திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, சர்வ மதத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like