ஏழு வருடங்கள் விடாமுயற்சி- ஆணாக மாறிய பெண்!!

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருபவர் ஹாரிஸன் மாஸ்ஸி. இவர் உடலாலும் மனதாலும் பெண்ணாக இருந்து வருபவர். இவர் கடந்த சில வருடங்களாக தன்னை திருநம்பியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, தனது ஏழு வருட விடாமுயட்சியால் தற்போது திருநம்பியாக மாறியுள்ளார் ஹாரிசன் மாஸ்ஸி. இவர் தன்னுடன் பெண் நண்பராக இருந்த ஹெவனுக்கு இடையே இருந்த உறவுமுறை பற்றியும், அதனால் அவர்கள் சந்தித்த கடினமான பிரச்சினைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருநம்பியாக மாறிய ஹாரிஸன் மாஸ்ஸி, ‘என் வாழ்க்கை அழகானது, அதிர்ஷ்டவசமானது. முற்பிறவிப் பயனால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஏன்னென்றால் என்னைப்போல் திருநங்கையாகவும் திருநம்பியாகவும் மாறியவர்கள் எதிர்க்கொண்ட கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் திருநம்பியாக மாறியபின்னும் என்னுடன் உள்ள நண்பர்களும் உறவினர்களும் என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்கிறார் ஹாரிசன்.

You might also like