side Add

அடுத்தடுத்து கரையொதுங்கிய 145 திமிங்கிலங்கள்!!

நியூசிலாந்தில் உள்ள ஒரு சிறிய தீவில் 145 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழந்துள்ளன.

நியூசிலாந்தில் உள்ளது ஸ்டீவர்ட் என்னும் சிறிய தீவு. இங்கு 375 மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதைப் பார்த்துள்ளார். அந்தத் தீவின் கடற்கரையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு இந்த திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழந்து கிடந்துள்ளன.

“அங்கு 150-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் இறந்து கிடந்தன. அவற்றில் சில உயிருடன் இருந்தன. அவற்றை நாங்கள் மீண்டும் கடலில் கொண்டு போய் சேர்த்தோம். அப்படியிருந்தும் நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் இறந்துவிட்டன” என ஸ்டீவர்ட் தீவின் பாதுகாப்பு நடவடிக்கை மேலாளர் ரென் லெப்பென்ஸ் தெரிவித்துள்ளார்.

You might also like