அடுத்தடுத்த கேட்ட வெடிப்புச் சத்தத்தால்- பதற்றமடைந்த மக்கள்!!

யாழ்ப்பாணம் மூளாயில் பகுதியில் திடீரென இரு தடவைகள் வெடிப்புச் சத்தம் கேட்டதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

வீடுகள் அதிருமளவுக்கு வெடிப்பு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. பதற்றமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் நின்றவாறு விவரத்தை அறிய ஆர்வப்பட்டனர். எனினும் வெடிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவரவில்லை.

இராணுவத்தினர் அந்தப் பகுதியிலுள்ள சுடலைப் பகுதியில் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் போது வெடிப்புச் சத்தம் கேட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like