அபி­வி­ருத்தி வேண்­டாம் – அர­சி­யல் தீர்வே முக்­கி­யம்!

ராணு­வம் எம்­முள் ஒரு சமூக அல­காக ஊடு­ருவி விடும். ஏற்­க­னவே தெற்­கின் கலாச்­சா­ரம் இங்கு ஊடு­ருவி வரு­கின்­றது. நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் எமது பாரம்­ப­ரி­யங்­கள் சிதைக்­கப்­பட்டு வரு­கின்­றன. உள்­நாட்டு எமது நிறு­வ­னங்­க­ளுக்­குச் சிங்­க­ளப் பெயர்­கள் சூட்­டப்­பட்டு வரு­கின்­றன. எமது கலை, கலாச்­சா­ரம், வாழும் முறை யாவும் வெளி­யார் ஊடு­ரு­வ­லுக்கு ஆளாகி வரு­கின்­றன. எம்­முள் போரின்­போது பொரு­ளா­தார ரீதி­யா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­கள் இவ்­வா­றான ஊடு­று­வல்­க­ளுக்கு இலே­சாக ஆளாகி விடு­கின்­றார்­கள். இரா­ணு­வத்­தி­னரை மகிழ்­விக்க வேண்­டும் என்றே சில காரி­யங்­க­ளில் ஈடு­பட்­டும் வரு­கின்­றார்­கள்.

மத­ம் மா­றி­ய­வர்­கள்
தமி­ழர்­க­ளா­கவே வாழ்­கி­றார்­கள்
எமது இந்து மக்­க­ளின் சாதி வேறு­பா­டு­கள் மற்­றும் எமது மக்­க­ளின் வறுமை நிலை எவ்­வாறு மத­மாற்­றத்தை வட கிழக்கு மாகா­ணங்­க­ளில் நிலை­பெ­றச் செய்­தன என்­பது எல்­லோ­ருக்­கும் தெரிந்த விட­யம். ஆனால் அவர்­கள் மத­மாற்­றத்­தின் பின்­ன­ரும் தமி­ழர்­க­ளா­கவே வாழ்­கின்­றார்­கள். ஆனால் இன்­றைய பெரும்­பான்மை மக்­க­ளின் புதிய ஊடு­று­வல் இன­வ­ழிப்­பாக அதை மாற இடம் அளித்து விடும் என்­பதே உண்மை. ஏற்­க­னவே மகா­வலி அதி­கா­ர­சபை கொண்­டு­வந்த சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் நிலை­பெற்­று­விட்­டன. அவை தற்­போது பெரு­கத் தொடங்­கி­யுள்­ளன.

உள்­ளூ­ராட்சி சபைப் பிர­தி­நி­தித்­து­வத்­தில் இந்­தப் பெருக்­கம் பிர­தி­ப­லித்து வரு­கின்­றது. இதற்­கேற்­றாற்­போல் எமது மக்­கள் எவ்­வ­கை­யே­னும் வெளி­நாட்­டுக்­குச் செல்­வதே உசி­தம் என்ற நினைப்­பில், இருப்­பதை எல்­லாம் விற்று வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல எத்­த­னித்து வரு­கின்­றார்­கள். சிலர் சென்று விடு­கின்­றார்­கள். பலர் பணத்தை இழந்து நிர்க்­க­தி­யாய் நிற்­கின்­றார்­கள். இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்­றி­னால்­தான் திட்­ட­மிட்ட அபி­வி­ருத்­தியை எமது பிர­தே­சங்­க­ளில் நாம் இயற்ற முடி­யும். ஊடு­று­வல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும்.

தென்­னி­லங்­கை­யர்­க­ளின்
ஊடு­ரு­வ­ல் பெருக்­கம்
பொரு­ளா­தார விருத்­தியே முக்­கி­யம் என்ற எதிர்­பார்ப்­பில் இன்று தென்­ன­வர்­க­ளின் ஊடு­ரு­வல் பொரு­ளா­தார ரீதி­யாக இங்கு பெரு­கப் பார்க்­கின்­றது. அவர்­க­ளுட் பலர் வியா­பா­ரி­கள். எமது வளங்­க­ளைச் சூறை­யாடி விற்று வளம் பெறவே அவர்­கள் கண்­ணும் கருத்­து­மாக இருக்­கின்­றார்­கள். நேர­டி­யாக எமது புலம்­பெ­யர் தமிழ் மக்­கள் மாகாண சபை­க­ளு­டன் சேர்ந்து முத­லீடு செய்­வதை அரசு விரும்­ப­வில்லை. அத­னால்­தான் முத­ல­மைச்­சர் நிதி­யத்தை ஐந்து வரு­ட­கா­ல­மாக மத்­திய அர­சாங்­கங்­கள் முடக்கி வைத்­துள்­ளது.

ஆகவே இந்­தப் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்­ப­தன் தாற்­ப­ரி­யத்தை நாங்­கள் நன்கு புரிந்து கொள்ள வேண்­டும். தெற்­கத்­தைய முத­லீட்­டா­ளர்­கள் பலர் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு முத­லைத்­தந்து தாங்­கள் முத­லா­ளி­க­ளாக முன்­னே­றவே பார்க்­கின்­றார்­கள். தகைமை அறிக்­கை­கள், சுற்­றா­டல் பொருத்­தம் பற்­றிய அறிக்­கை­கள், மண், நீர், மின்­சா­ரம் பற்­றிய அறிக்­கை­கள் பெற்று எமது திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கப் பொரு­ளா­தார மேம்­பாட்­டில் உள்­நு­ழைய விரும்­பு­கின்­றார்­கள் இல்லை. வந்­த­தும் வளங்­க­ளைப் பெற்று வரு­மா­னம் பெறவே எத்­த­னிக்­கின்­றார்­கள்.

உதா­ர­ணம் ஒன்று
மன்­னா­ரில் தொடங்கியி­ருந்த தோல் பத­னி­டும் தொழிற்­சா­லை­யில் தோல் பத­னி­டும் போது நச்­சுப் பதார்த்­தங்­கள் வெளி­வ­ரு­வ­தை­யும் அதி­கப்­ப­டி­யான நீர் அந்த செயற்­றிட்­டத்­துக்கு வேண்­டி­யி­ருப்­ப­தை­யும் மேலும் சில கார­ணங்­க­ளைக் கரு­தி­யும் நாங்­கள் குறித்த பொரு­ளா­தார உள்­நு­ழை­வுக்கு அனு­மதி கொடுக்­காது விட்­டோம். உடனே நாங்­கள் பொரு­ளா­தார விருத்­திக்கு எதி­ரா­ன­வர்­கள், வெளி­யார் முத­லீ­டு­க­ளைப் புறக்­க­ணிப்­ப­வர்­கள் என்­றும், தம்­மி­டம் எத­னையோ எதிர்­பார்க்­கின்­றோம் என்­றும், தரா­த­தால்த்­தான் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் இணை­யத் தளங்­க­ளில் எம்மை வெகு­வாக விமர்­சிக்­கத் தொடங்­கி­னார்­கள். இது இவ்­வ­ள­வுக்­கும் குறித்த செயற்­றிட்­டம் ஹம்­பாந்­தோட்­டை­யில் அனு­மதி வழங்­காத நிலை­யி­லேயே இங்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இனி உங்­கள் கேள்­விக்கு
வரு­கின்­றேன்
வட­கி­ழக்­கின் பொரு­ளா­தார விருத்­தி­யில் நான் மிக­வும் பற்­று­று­தி­யு­டை­ய­வ­னாக இருக்­கின்­றேன். ஆனால் எவ்­வா­றான முத­லீ­டு­கள், எவற்­றிற்­கான முத­லீ­டு­கள், யாரால் கொண்­டு­வ­ரப்­ப­டும் முத­லீ­டு­கள், அவற்­றின் தூர­கா­லப் பாதிப்­புக்­கள் என்ன என்­பன போன்ற பல­வற்­றி­லும் கண்­ணும் கருத்­து­மாய் உள்­ளேன். மேலும் பெயர் வாங்­கு­வ­தற்­கா­க­வும், மற்­றைய தனிப்­பட்ட நன்­மை­கள் கரு­தி­யும், பெரிய செயற்­றிட்­டங்­களை வெகு­வாக ஆய்ந்­த­றி­யாது அனு­ம­திப்­ப­தற்கு நான் விரும்­ப­வில்லை. தனிப்­பட்ட நிதி ரீதி­யான அல்­லது வேறு நன்­மை­கள் எனக்­குத் தேவை­யில்லை. எமது மக்­க­ளின் தூர­கால நன்­மை­களே எனது கரி­சனை. வெளி­யார் உள்ளே நுழைந்து எமது கலை, கலாச்­சார விழு­மி­ யங்­களை, எமது அமை­திச் சூழலை, எமது பாரம்­ப­ரி­யங்­களை அழிக்க என்­னால் இடம் கொடுக்க முடி­யாது. தெற்­கில் ஹிக்­க­டு­வேக்கு நேர்ந்த கதி இங்­கும் எழ அனு­ம­திக்க முடி­யாது. அவ்­வா­றெ­னின் எமது வறுமை நிலை­யில் வாழும் மக்­க­ளுக்கு என்ன பதில் என்று கேட்­பீர்­கள்.

வறு­மை­யைப் போக்­கக்­கூ­டிய
வழி­மு­றை­கள்
சிறிய, மத்­திம முத­லீ­டு­க­ளின் ஊடாக நாம் கிரா­மிய மக்­க­ளின் வாழ்­வா­தா­ரங்­களை மேம்­ப­டுத்தி வந்­துள்­ளோம். பல தொழில்­க­ளில் சுய­நி­றைவு பெற ஊக்­கு­வித்து வந்­துள்­ளோம். சிறிது சிறி­தா­கப் பெரு­கச் செய்­வதே எமது கொள்கை. பெரிய செயற்­றிட்­டங்­களை உள் நுழைய விடா­த­தா­லேயே என்­மீது இந்­தக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. சுமத்­தி­ய­வர்­கள் எவ்­வா­றெ­னி­னும் வடக்­கில் தடம் பதித்து வட மாகாண வளங்­களை அள்­ளிச் செல்ல விழைந்­துள்­ள­ வர்­களே. அவர்­களே பல அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் எம்­மீது ஏவி விடு­கின்­றார்­கள். இவற்­றுக்­கெல்­லாம் நாங்­கள் பயந்­தால் வட மாகா­ணம் தனது தகை­மையை இழந்து விடும், தனித்­து­வத்­தைப் பறி­கொ­டுத்து விடும்.
வெளி­யார்­க­ளின் கைப்­பொம்­மை­யாகி விடும். சில அர­சி­யல் கட்­சி­கள் இத­னையே வேண்டி நிற்­கின்­றன. மற்­றைய மாகா­ணங்­கள் போல் ஏன் நீங்­கள் பெரிய செயற்­றிட்­டங்­க­ளுக்கு இடம் கொடுக்­கின்­றீர்­கள் இல்லை என்று கேட்­கின்­றார்­கள். நாங்­கள் செயற்­றிட்­டங்­க­ளுக்கு எதி­ரில்லை. அவை எமது பாரம்­ப­ரி­யத்­தைச், சூழலை, விழு­மி­ யங்­களை விழுங்­கா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும்.

நான் ஐந்து வரு­டங்­க­ளில்
பல­வற்­றைச் சாதித்­தி­ருக்­கி­றேன்
பெரிய இடப் பெயர்­வு­கள் கிரா­மங்­க­ளில் இருந்து நக­ரப்­பு­றத் தொழிற்­சா­லை­கள் நோக்கி இடம் பெறு­வதை நாங்­கள் விரும்­ப­வில்லை. இருக்­கும் இடத்­தில் இருந்தே மக்­கள் பொரு­ளா­தார விருத்தி பெற நாங்­கள் திட்­டங்­க­ளைத் தீட்­டி ­யுள்­ளோம். அந்­தத் திட்­டங்­களை நடை­ மு­றைப்­ப­டுத்­தி­யும் வரு­கின்­றோம். ஆகவே சாதிக்­க­வில்லை என்று கூறு­ப­வர்­கள் நாங்­கள் ஐந்து வரு­டங்­க­ளில் சாதித்­தவை பற்­றிக் கூறி­யுள்ள கையா­வ­ணத்­தைப் பரி­சீ­லித்­துப் பாருங்­கள். நாங்­கள் சிறு­கச் சிறு­கச் செய்து மக்­கள் நல­னைப் பெரு­கச் செய்­யவே விரும்­பு ­கின்­றோம். பெரி­ய­வை­க­ளைத் தகா­த­வர்­க­ளி­டம் இருந்து உள்­ளேற்று எமது நிலை­க­ளில் இருந்து நாம் காற்­ற­டித்­துச் செல்­லப்­பட ஆயத்­த­மாக இல்லை. என்­னு­டைய காரி­யங்­கள் கொள்கை ரீதி­யா­ன­வையே ஒழிய பிர­பல்­யம் பெறச் செய்­ப­வை­கள் அல்ல.

You might also like