side Add

அமைச்சர் சஜித் பிறந்த நாளில் -வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல்!!

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பிறந்தநாளான இன்று )மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் 25 வீடுகளுக்கும், நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட அருவிமோட்டை கிராமத்தில் 15 வீடுகளுக்கும் இன்று அடிக்கல் நடப்பட்டது.

மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தின் வீடுகளுக்கான அடிக்கல்லை வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மற்றும் நிர்வாகிகளும், அருவிமோட்டை கிராமத்தில் அமைக்கப்படும் வீடுகளுக்கான அடிக்கல்லை நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜொனி, வீடமைப்பு அதிகாரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் சந்தான், அருவிமோட்டை கிராமசேவையாளர் அந்தோணிப்பிள்ளை மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் நட்டனர்.

தொடர்ந்து மடுக்கோவிலில் சிறப்பு ஆராதனையும், வீடமைப்பு அதிகார சபை மன்னார் அலுவலகத்தில் 10 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜொனியால் பயனாளிகளுக்கு மாமரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

You might also like