அழகான பாதங்கள் வேண்டுமா..?

போதுமான சுடு நீரை அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் கால்கள் மூழ்கும் அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி, கொஞ்சம் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்து அதில் உங்கள் கால்களை முக்கி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அந்த 20 நிமிடங்களுக்கும் அந்த நீர் வெதுவெதுப்பாக இருப்பது அவசியம்.

கால்களில் சோப் அல்லது ஃபுட் க்ளென்சர் இருந்தால் அதை பாதங்களில் தேய்த்து நன்கு ஸ்கிரப் செய்யுங்கள். மென்மையான பிரெஷ் இருந்தால் அதை பயன்படுத்தி ஸ்கிரப் செய்யலாம். கால்கள் மட்டுமன்றி கால்கள், விரல் நகங்களையும் தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.

ஸ்கிரப்பிங் செய்தபின் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். துணியால் பாதங்களின் நீரைத் துடைக்கவும்.

தற்போது கால்களில் ஃபுட் மசாஜ் கிரீமை கால், பாதங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடங்களுக்கு காயவிடவும்.20 நிமிடங்களுக்குப் பிறகு கிரீமை துணியால் துடைத்து விடவும்.

You might also like