அழுக்கற்ற சருமத்துக்கு வீட்டிலேயே தயாரிக்கலாம் வெந்தய கிரீம்!!

வெந்தயம் சருமத்துக்கு குளுமையை அளித்து ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவும். இதனால் சரும வறட்சியைத் தடுக்க முடியும். வெந்தயம் நச்சு நீக்கியாகவும் இருப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும்.

தினமும் பயன்படுத்தும் வகையில் வீட்டிலேயே வெந்தய ஜெல் கிரீம் தயாரிப்பது எவ்வாறு என்றுப் பார்க்கலாம்.

தேவையானவை

வெந்தயம் – 2 கரண்டி

மஞ்சள்- அரைக் கரண்டி

கற்றாழை ஜெல்- ஒரு கரண்டி

தண்ணீர்- ஒரு கப்

செய்முறை :

வெந்தயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். அதோடு மஞ்சளும் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.

நன்குக் கொதித்து திட நிலைக்கு வரும்போது அணைத்துவிடவும். அதை தற்போது வடிகட்டியில் இட்டு தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் சேர்த்து அதில் இந்த வெந்தயத் தண்ணீரையும் , ஒரு சிட்டிகை மஞ்சள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.

அதை தற்போது நன்கு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். ஜெல் தன்மையில் நன்குக் கலந்ததும் அதை காற்று புகாத போத்தலில் கொட்டி பயன்படுத்துங்கள்.

தினமும் இரவு முகத்தில் தேய்த்து வட்டப் பாதையில் சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பிரகாசித்து தெளிவாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

You might also like