ஆசிய வலைப்பந்தாட்ட போட்டி- இலங்கை அணி சம்பியன்!!

0 15

2018 ஆம் ஆண்டு ஆசிய வலை பந்தாட்ட போட்டிகளில் ஐந்தாவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளது.

இன்று, இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் இலங்கை அணி மோதியது.

இந்த போட்டியில் இலங்கை அணி 69 இற்கு 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இம்முறை இடம்பெற்ற ஆசிய வலை பந்தாட்ட போட்டியில், பங்குப்பற்றிய எந்தவொரு ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியடையவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்து – லிவர்பூலில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக வலை பந்தாட்ட போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like