ஆலோசனை குழுவை நியமித்தார் ஜனாதிபதி!!

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையிலான இந்த தொழில்சார் ஆலோசனைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்ரதிஸ்ஸ, நைஜல் ஹெச், சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு, முதன்முறையாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று கூடியது.

You might also like