இடியப்பத்தில் தலைமுடி- உணவுப் பொதி வாங்கியவர் விசனம்!!

வவுனியாவில் உள்ள சைவ உணவகமொன்றில் இடியப்ப பொதியொன்றை வாங்கிய நபர், அந்தப் பொதியை வீட்டில் சென்று திறந்து பார்த்த போது, அதில் தலைமுடி கொத்தாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த சைவ உணவத்திற்கு மீண்டும் சென்ற அந்த நபர் இடியப்பத்தில் தலைமுடி இருப்பதைக் காட்டியுள்ளார்.

அதனை உணவக உரிமையாளர் ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உணவகங்களில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளதால், நாளாந்தம் உணவகங்களில் உணவுகளைக் கொள்வனவு செய்யும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close