இனிப்பான பருப்புப் போளி!!

தேவையானவை

கடலை பருப்பு – ஒரு கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
பாகு தயாரிக்க
வெல்லம் – 1 1/2 கப்
தண்ணீர் – 1/4 கப்

மைதா மா – 2 கப்
மஞ்சள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1/4 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/4 கப்
வாழை இலை – மாவு திரட்டுவதற்கு ஏற்ப

செய்முறை :

கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பைக் கொட்டி கால் கப் தண்ணீர் மற்றும் கால் தேக்கரண்டி உப்புச் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.

வெல்லப்பாகு தயாரிக்க பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீர் சேர்த்து உருக விடவும். உறுகியதும் வடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லத்தை கொட்டி அதோடு வேக வைத்த பருப்பை நன்கு மசித்து அதில் கொட்டிக் கிளறவும். அதோடு துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளவும். வெல்லமும் பருப்பும் நன்கு கலந்து சற்று கெட்டிப் பதத்துக்கு வந்ததும் அணைத்து விடவும்.

மா பிசைய மைதா மா , மஞ்சள், உப்பு , நெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும். அதோடு இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிப் பிசையவும். மாஇலகிய பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் மென்மையாக இருக்கும்.பிசைந்த மாவைக் கால் மணி நேரம் மூடி ஊற வைக்கவும்.

பின் வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் பிசைந்த மைதா மாவைத் தட்டி அதோடு கடலைப் பருப்பையும் உருண்டையாகப் பிசைந்து அதில் வைத்து உருட்டிக்கொள்ளவும். பின் விரல்களால் தட்டையாக தட்டிக் கொண்டே இருங்கள்.

உங்களுக்கு தேவையான பதத்தில் தட்டையாகத் தட்டிக்கொள்ளவும். பின் அதை அப்படியே எடுத்து தோசைக் கல்லில் போட்டு நெய் தடவி வாட்டி எடுக்கவும்.

மிதமான சூட்டில் வாட்டி எடுக்க வேண்டும். சுவையான பருப்பு போளி தயார்.

You might also like