side Add

இன ஒற்றுமையை சீர்குலைக்கும் ஆசிரியரை வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!!

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி களுவன்கேணியில் இன்று ஆர்பாட்ட பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

”வேண்டாம் வேண்டாம் மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம், விழித்துக்கொள் தமிழா முஸ்லிம்களின் மதமாற்றத்துக்கு எதிராக, முஸ்லிம் சமூகமே உனது மத்தை எம்மீது திணிக்காதே, எமது பகுதியில் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன நல்லுறவைச் சீர்குலைக்கும் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன்மாற்ற்றை கூட்டாதே இனக்கலவரத்தை தூண்டாதே” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பபட்ட பேரணியில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

You might also like