இரு குழுக்களிடையே மோதல்- ஒருவர் உயிரிழப்பு!!

குடும்பத் தகராறு காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நிந்தவூர் 18 ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது, மாளிகைக்காட்டைச் சேர்ந்த முஹம்மது அஜ்மில் (26) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர், நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

You might also like