side Add

இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­பார்­களா தமிழ்த் தலை­மை­கள்?

கடந்த ஒக்­ரோ­பர் 26ஆம் திகதி அரச தலை­வ­ரின் நட­வ­டிக்­கை­ளால் நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் நெருக்­கடி நிலமை தற்­போது தணிந்­துள்­ளது. அரச தலை­வ­ரால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரும் பங்கை வகித்­தி­ருந்­தது. தற்­போது புதிய அரசு அமைக்­கப்­பட்­டுள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு அமைப்­ப­தற்கு நிபந்­த­னை­யு­டன் என்று கூறப்­பட்­டா­லும் எந்­த­வித எழுத்­து­மூல நிபந்­த­னை­க­ளும் இன்­றியே ஆத­ர­வை­க் கூட்­ட­மைப்பு வழங்­கி­யது.

இத­னால், தெற்­கில் ஏற்­பட்ட நில­மை தணிந்­துள்­ள­ போ­தும் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தீர்­வின்­றியே தொடர்­கின்­றன. அவற்­றில் ஒன்று அர­சி­யல் கைதி­கள் விடு­தலை.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் நீண்­ட­கா­லம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி ஒரு­வர் நேற்­று­ முன்­தி­னம் உணவு தவிர்ப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார். தன்னை விடுவிக்குமாறு கோரிய அவர் இந்­தப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார்.

தமிழ் அர­சி­யல் கைதி­கள் உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வது இது முதல் தட­வை­யல்ல. அவர்­கள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்­திப் பல போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ள­னர். தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் அவர்­க­ளைச் சந்­தித்து வாக்­கு­று­தி­கள் வழங்கி அவர்­க­ளின் போராட்­டங்­களை முடித்து வைத்­த­போ­தும் அதன் பின்­னர் காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எவற்­றை­யும் மேற்­கொள்­ள­வில்லை.

சிறைச்­சா­லை­க­ளில் நீண்­ட­கா­ல­மாக அடைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் மாற்­றுக் கருத்­துக்­கள் இல்லை. அந்த விட­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சுக்­குப் போதிய அழுத்­தங்­களை வழங்க வேண்­டும் என்­ப­தும் மக்­க­ளின் எதிர்ப்­பார்ப்பு.

தமிழ் மக்­க­ளின் தீர்க்­கக் கூடிய பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­குக் கிடைக்­கும் சந்­தர்ப்­பங்­க­ளைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தவற விடு­கின்­றதா என்ற ஐயப்­பா­டும் மக்­கள் மத்­தி­யில் எழா­மல் இல்லை. ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்சி அமைக்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு தேவை­யாக இருந்த நிலை­யில் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை, காணிப் பிரச்­சி­னை­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கத் தமது பிடியை இறுக்­கி­யி­ருக்­க­லாம் என்ற கருத்­துக்­க­ளும் உள்­ளன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இந்த விட­யங்­க­ளில் அர­சு­டன் இறுக்­க­மான போக்­கைக் கடைப்­பி­டிக்­க­வில்லை என்­ப­தைப் போன்றே தெற்­கில் இருந்­து­வ­ரும் கருத்­துக்­கள் இருக்­கின்­றன. நேற்­று­முன்­தி­னம் முல்­லைத்­தீ­வுக்கு வந்த நீதி அமைச்­ச­ரி­டம் அர­சி­யல் கைதி­கள் விட­யம் தொடர்­பா­கக் கேட்­கப்­பட்­ட­போது அவர் அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நாடா­ளு­மன்­றத்­தின் ஊடாக முடி­வெ­டுக்­கப்­ப­டும் என்று பொது­வா­கக் கூறிச் சென்­றுள்­ளார். அர­சும் இந்த விட­யத்­தில் மெத்­த­னப் போக்­கையே கைக்­கொண்­டுள்­ளது.

ஆனால், அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அர­சி­யல் ரீதி­யான முடிவே எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் மீண்­டும் மீண்­டும் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றார். அவ­ரால் ஆட்­சி­யில் மீண்­டும் அமர வைக்­கப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ரது இந்­தக் கருத்­துக்கு மதிப்­புக் கொடுத்து இது­வ­ரை­யில் நட­வ­டிக்கை எது­வும் எடுத்­த­தா­கத் தெரி­ய­வ­ர­வில்லை.

அர­சி­யல் கைதி ஒரு­வர் தற்­போது போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார். ஏனைய சில­ரும் போராட்­டத்­தில் இறங்­க­வுள்­ள­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. தமது வாழ்­வின் பெரும்­ப­கு­தியை இருண்ட சிறை­யில் தொலைத்­துள்ள அவர்­க­ளின் விடு­த­லையை விரை­வாக்க வேண்­டி­யது அவ­சி­யம். தமிழ்த் தலை­மை­கள் அதை உணர்ந்து செயற்­பட வேண்­டும்.

You might also like