இலகுவான அழகுக் குறிப்புகள்!!

சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து
விடும்.

*பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்பளக்கும்.

*பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

* வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

* தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும். கைகள் மிருதுவாக இருக்கும்.

* முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.

* கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.

* அப்பிள் பழத்தை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

You might also like