side Add

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 1.18 ரூபாயால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி 156.19 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று, 157.37 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இது முன்னொரு போதும் இல்லாதளவு வீழ்ச்சியாகும்.

கண்டி வன்முறைக்கு பின்னர், அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 56 சதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் மதிப்பு 2.22 ரூபாவினால் குறைவடைந்துள்ளதுடன் இது 1.43 வீத வீழ்ச்சியாகும்.

You might also like
X