இளைஞர்களின் மனிதாபிமானம்!!

விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போராடிய மாட்டை அவதானித்த இளைஞர்கள் சிலர், அதற்குரிய மருத்துவரை அழைத்து உரிய சிகிச்சை வழங்கி மாட்டைக் காப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை கந்தளாய் வீதியில் விபத்துக்குள்ளான மாடு பலமணி நேரம் உயிருக்கு போராடி தாகத்துடன் கிடந்துள்ளது.

அதே நேரம் வீதியால் சென்ற இளைஞர்கள் சிலர் மாட்டை மீட்டு, குளிப்பாட்டி அதன் தாகத்தையும் தீர்த்து, மிருகவைத்தியரை அழைத்து உரிய சிகிச்சையளித்தனர். பின்னர் மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like