side Add

உருளைக்கிழங்கு வடை

தேவையான பொருள்கள் :

பாண் துண்டுகள் – 10
வறுத்த ரவை – அரை கப்
அரிசி மா – இரு மேசைக் கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
கரட் துருவல் – இரண்டு மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
இஞ்சித் துருவல் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
உருளைக் கிழங்கு – 2

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய்,பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாணைப் போட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் வறுத்த ரவை, அரிசி மா, உப்பு, கரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

You might also like