side Add

உறுப்பினர்களின் ஊதியத்தில் இருந்து கட்சிக்கு ஆயிரம் ரூபா!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஆயிரம் ரூபா பணம், கட்சிக்கு சபையின் ஊடாக நேரடியாக வழங்கப்படுகிறது.

இந்த விடயம் இன்று நடைபெற்ற அமர்வில் தெரியவந்துள்ளது.

சபையின் வரவு செலவீன விபரங்கள் சபையில் சமர்ப்பதில் சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரின் மாத ஊதியத்தில் இருந்து கட்சியின் பொருளாளருக்கு ஆயிரம் ரூபா அனுப்பப்படுவதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

இதனை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் மயூரன், கணக்கறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளருக்கு ஆயிரம் ரூபா என கூறப்பட்டுள்ளது அதன் விளக்கத்தை தருமாறு சபையில் கோரினார்.

அதற்குப் பதில் அளித்த உறுப்பினர் குகானந்தன்,எமது கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தும் மாதாந்தம் ஆயிரம் ரூபா கட்சிக்குச் செலுத்த வேண்டும் என எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கட்சியின் பொருளாளரால் சபைக்கு எமது அனுமதியுடன் நேரடியாக கடிதம் அனுப்பப்படுள்ளது.அதன் அடிப்படையில் எனது மாதாந்த ஊதியத்தில் இருந்து ஆயிரம் ரூபா அனுப்பப்படுகிறது என்று விளக்கமளித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கூட்டமைப்பு உறுப்பினர் மதுசுதன்,

கட்சிக்கு மாதாந்த பணம் செலுத்துவதாக இருந்தால் அவர் ஊதியத்தை பெற்ற பின்னர் அவரே நேரடியாகச் செலுத்தலாம் சபையின் ஊடாக நேரடியாகச் செலுத்த வேண்டிய தேவையில்லை என கூறினார்.

அதற்குக் கருத்து தெரிவித்த சபையின் தவிசாளர்,

உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஊதியத்தில் இருந்து கட்சிக்குக் கட்டணம் செலுத்துவது வழமையான ஒன்று. அவர்கள் கட்சிக்குக் கட்டியிருந்தால் அப்படி எமக்கு நேரடியாக கோரிக்கை விட்டிருக்க மாட்டார்கள்.அத்துடன் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும் அவ்வாறு கட்டணம் அறவிடப்படவுள்ளது. ஆகவே இது சாதாரண விடயம் என்றார்.

You might also like