உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு!!

பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தமர்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.

இதில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உப தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கருத்தமர்வு நடைபெற்றது.

You might also like