side Add

ஊரெழு றோயல் இறு­திக்கு தகுதி!!

வட­மா­காண உடற்­கல்வி டிப்­ளோமா ஆசி­ரி­யர் சங்­கம் நடத்­தும் அழைக்­கப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் ஊரெழு றோயல் அணி வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

உரும்­பி­ராய் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் ஊரெழு றோயல் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உருத்­தி­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. ஆட்­டத்­தின் 7ஆவது நிமி­டத்­தில் உருத்­தி­ர­பு­ரம் அணி­யின் முத­லா­வது கோலை ஹரிஸ் பதி­வு­செய்­தார்.

12ஆவது நிமி­டத்­தில் றோய­லின் முத­லா­வது கோலை எடி­சன் பதி­வு­செய்­தார். 13ஆவது நிமி­டத்­தில் றோய­லின் சார்­பாக நிதர்­சன் கோலொன்­றைப் பதி­வு­செய்­தார். 21ஆவது நிமி­டத்­தில் உருத்­தி­ர­பு­ரம் அணி­யின் சார்­பில் ஹரிஸ் மற்­றொரு கோலைப் பதி­வு­செய்­தார்.

இரண்டு அணி­க­ளும் தலா இரண்டு கோல்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யின் மூன்­றா­வது நிமி­டத்­தில் எடி­சன் றோய­லின் மூன்­றா­வது கோலைப் பதி­வு­செய்­தார். ஆட்­டம் முடி­வ­தற்கு 9 நிமி­டங்­கள் இருக்­கை­யில் நடு­வர் வழங்­கிய தீர்ப்பை ஏற்க மறுத்து ஆட்­டத்­தில் இருந்து வெளி­யே­றி­யது உருத்­தி­ர­பு­ரம். இதை­ய­டுத்து 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது றோயல்.

You might also like