எதிர்வரும் 20 விடுமுறை!!

எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

வெசாக் போயா தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வருவதனாலும், மறுநாள் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினமாக வருவதனாலும், எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like