எரிவாயு கிடங்கில் வெடிப்பு- 35 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் 35 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நசரவா மாகாணத்தின் தலைநகர் லஃபியாவில் (Lafia) எரிவாயு சேமிப்பு கொள்கலன் வெடித்துள்ளது. அங்கு நேற்று ) மாலை திடீரென வெடிச் சத்தம் கேட்டதுடன், பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது.

எரிவாயு வெடிப்பினையடுத்து, கிடங்கிற்கு அருகிலிருந்த வாகனங்கள் தீப்பற்றிக் கொண்டதுடன், அதில் பயணித்தவர்கள் பாதசாரிகள் எனப் பலரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்தினால் இதுவரையில் 35 பேர் வரையில் உயிரிழந்ததுடன், 100க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அத்துடன், அவர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரிய நகரங்களில் உள்ள பெரும்பாலான எரிவாயு கிடங்குகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபடாத காரணத்தால் அங்கு அடிக்கடி இதுபோன்ற திடீர் விபத்துகள் நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close