எலிசபத் ராணி குடும்பத்தை- லண்டனில் இருந்து வெளியேற்ற ரகசிய திட்டம்?

பிரெக்சிட் முடிவு தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் ராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தாரை லண்டனில் இருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016 ஆ-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்துப் பலர் வாக்களித்தனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 ஆம் திகதி நெருங்கி வருவதால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மஅமைச்சர்களும், சொந்தக் கட்சி எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த எதிர்ப்பு போராட்டமாக உருவெடுக்கலாம் எனக் கருதப்படுகிறது. அப்படி ஒரு போராட்டம் வெடித்தால் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வாழ்ந்துவரும் ராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தாரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பனிப்போர் காலத்திலும், பிரிட்டன் மீது சோவியத் யூனியன் (ரஷியா) அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்பட்ட வேளையிலும் பிரிட்டன் அரசக் குடும்பத்தினர் இதுபோல் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டு, லண்டன் நகருக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்ட வரலாறையும் அந்த செய்தி சுட்டிக் காட்டியுள்ளது.

You might also like