side Add

ஒதியமலை படுகொலை நினைவேந்தல்!!

நெடுங்கேணி முல்லைத்தீவு எல்லையில் அமைந்துள்ள ஒதியமலைக்கிராமத்தில் 32 அப்பாவி தமிழ் மக்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 34வது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

1984 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2ம் திகதி ஒலுமடு கிராமத்தை சுற்றிவளைத்த படையினர், கிராமத்தின் ஆண்களை அழைத்துச் சென்று வாசிகசாலை வளாகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதில் கிராமத்தைச் சேர்ந்த 32 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இவர்கள் நினைவாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்கள் 32பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நடுகற்களுக்கு உறவினர்களால் சுடறேற்றி அகவணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், து.ரவிகரன் மற்றும் வவுனியா வடக்கு, கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவுகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like