ஓதி­வ­ள­ரும் உயி­ரா­ன­ உ­ல­க­மொ­ழி­ த­மிழ்!!

பகுதி-28

தமிழ் மொழி ­தி­ரா­வி­ட­ மொ­ழிக் குடும்­பத்­தின் முதன்­மை­யா­ன­ மொ­ழி­க­ளில் ஒன்று.உல­கம் முழு­வ­தி­லும் எட்­டுக்­கோடி (800 இலட்­சம்) மக்­க­ளால் பேசப்­ப­டும்­மொ­ழி­யா­க­த் தமிழ்மொழி உள்­ளது. உல­க­ அள­வில் ஒ­ரு­மொ­ழி­யைத் தாய் மொ­ழி­யா­கக் கொண்­டு­பே­சும் மக்­க­ளின் எண்­ணிக்­கை­ அ­டிப்­ப­டை­யில் பார்த்­தால், தமிழ் மொழி­ ப­தி­னெட்­டா­வது இடத்­தில் உள்­ளது. இந்­தி­ய­ மொ­ழி­க­ளில் இணை­யத்­தில் அதி­க­ அள­வில் ப­யன்­ப­டுத்­தப்­ப­டும் மொழி­க­ளில் முதன்­மை­யா­ன­தாக­ த­மிழ் மொழியே­ உள்­ள­தா­க­க் ‘கூ­குள்’ தன­து­ க­ணக்­கெ­டுப்­பில் குறிப்­பிட்­டுள்­ளது.

தமிழ்­மொ­ழி­ இ­ரண்­டா­யி­ரத்­து­ஐந்­நூறு ஆண்­டு­க­ளுக்­கும் மேல் பழ­மை­ வாய்ந்த இலக்­கி­ய­ ம­ர­பைக் கொண்­டுள்­ளது.ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்­கு­ முன்­னர் சிறு­வர்­க­ ளுக்­கு­ அ­க­ர­ வ­ரி­சை­யைக் கற்பிக்­கும் ஆத்­திசூ­டி­ இ­யற்­றப்­பட்­டது.திருக்­கு­றள் ஏறத்­தாழ 2ஆயிரம் ஆண்­டு­க­ளுக்­கு­ முன்னர் இயற்­றப்­பட்­டது.

இந்திய மொழிகளில் முதல் முதலாக செம்மொழி அங்கீகாரம் தமிழ்மொழிக்கே
இந்­தி­யா­வி­லும் வௌிநா­டு­க­ளி­லும் உள்­ள­ ப­ல­த­மிழ் அமைப்­புக்­க­ளி­ன­தும்,அறி­ஞர்­க­ளி­ன­தும் நீண்­ட­கா­ல­ மு­யற்­சி­க­ளைத் தொடர்ந்­து,­ இந்­தி­ய­ அ­ர­சால் தமிழ் ஒரு­ செம்­மொ­ழி­யா­க­ அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­ய­ மொ­ழி­க­ளில் செம்­மொ­ழி ­யா­க­ அங்­கீ­கா­ரம் பெற்­ற­மு­தல்­மொ­ழி­ த­மிழ் மொழி­யா­கும். 2004 ஆம் ஆண்­டு­ ஜூன் 6 ஆம் திக­தி­ இந்­தி­ய­ நா­டா­ளு­மன்­றத்­தின் இரண்டு அவை­க­ளி­ன­தும் கூட்­டுக் கூட்­ட­ மொன்­றில் வைத்து, அப்­போ­தைய இந்­தி­ய­ கு­டி­ய­ர­சுத் தலை­வர் டாக்­டர் அப்­துல் கலாம் அவர்­க­ளால் தமிழ் மொழி­செம்­மொ­ழி­யா­க­அ­றி­விக்­கப்­பட்­டது. அந்­தச் செம்­மொ­ழிக்கு 2010ஆம் ஆண்­டு­ க­ரு­ணா­நி­தி­ செம்­மொ­ழி­ ம­ா­நா­டு­ ந­டத்­தி­னார். அது­ ஈ­ழத்­தின் இறு­திப்­போர் பல­ ஆ­யி­ரம் மக்­க­ளின் சாவு­ட­னும் துய­ரங்­க­ளு ­ட­னும் முடி­வ­டைந்­த­ கா­ல­கட்­ட­மாக இருந்­தது. இத­னால் க­ரு­ணா­நி­தி ­ப­லத்­த­ கண்­ட­னங்­க­ளைச் ­சந்­தித்­தார்.

செம்மொழி மாநாட்டைப்
புறக்கணித்த தமிழகக் கட்சிகள்
“கரு­ணா­நி­தி­யால் நடத்­தப்­படும் உல­கத் தமிழ்ச் செம்­மொ­ழி­மா­நா­டு­ என்­பது, பன்னாட்டுத் த­மிழ் ஆராய்ச்­சிச் ­சங்­கத்­தின் உல­கத் த­மிழ் மாநா­டு­ வ­ரி­சை­யில் இடம் பெறா­த­தால், இந்­த­ மா­நாட்­டில் அ.தி.மு. க க­லந்­து­கொள்­ள­ வேண்­டி­ய­ அ­வ­சி­யம் ­­­இல்லை. என­வே தி.மு.க அ­ர­சால் நடத்­தப்­ப­டும் இந்­த­உ­ல­கத் த­மிழ்ச் செம்­மொ­ழி ­மா­நாட்­டை அ.தி.மு.க பு­றக்­க­ணிக்­கும்’’ என் றார் ஜெய­ல­லிதா. “உல­கத் தமிழ் செம்­மொ­ழி­ மா­நாட்­டில் ம.தி.முக­வும் பங்­கேற்­கா­து”­­என்­று­ அந்தக்­கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் வை.கோ அ­றி­வித்­தார்.

“பக்­கத்­து­ நாட்­டில் தமி­ழர்­கள் துடிக்கத் துடிக்­கப் ப­டு­கொ­லை­ செய்­யப்­பட்­ட­போது, தமி­ழு­ணர்­வோ­டு­ எ­து­வும் செய்­யா­மல் இருந்­து­விட்டு, இன்­றும் அக­தி­கள் முகா­மில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­ ஈ­ழத்­த­மி­ழர்­கள் ­அடைக்­கப்­பட்­டுள்­ள­நி­லை­யில், இந்­தச்­ செம்­மொழி ­மா­நா­டு­ அ­வ­சி­ய­மா­ன­ஒன்றா?’’ என்­று­ ம­லே­சி­யா­ பி­னாங்­கு ­மா­நி­ல­ து­ணை­ மு­தல்­வர் பேரா­சி­ரி­யர் இரா­ம­ சா­மி ­வி­மர்­சித்­தார்.

அதே­வேளை, ‘‘எரிந்­த ­கட்­சி,­ எ­ரி­யா­த­ கட்­சி­ என்­று­ பார்க்­கா­மல் அதற்­கு­ மே­லே­ சென்று இந்­த­ ம­ாநாட்­டு­ வி­ச­யங்­க­ளைப் பார்க்­க­ வேண்­டும். கரு­ணா­நி­தி­ அ­ர­சி­ய­லுக்­கா­க­ செம்­மொ­ழி­ மா­நாட்­டை­ ந­டத்­து­கி­றார் என்­ப­து­ வே­று­வி­ட­யம். அதற்­காக இப்­ப­டி­யா­ன­ தொ­ரு ­ம­ா­நாட்­டை­ ந­டத்­தக் கூடா­து­ என்­று­ சொல்­லக்­கூ­டாது. இங்கு, இவ்­வ­ள­வு­ கா­சைச் செல­விட்­டு­ வே­று ­யார் தமி­ழுக்­கு­ ம­ா­நா­டு­ ந­டத்­த­ மு­டி­யும்? இதைச்­ சிந்­திக்­க­ வேண்­டும். தமி­ழுக்­கு­ ஒ­ரு­ மா­நா­டு ­ந­டக்­கி­றது. இதை­நான் வர­வேற்­கி­றேன். முதல்­வர் கரு­ணா­நி­திக்­குள்­ள ­அ­ர­சி­யல் எதிர்ப்­புக்­கள் மாநாட்­டை­ பா­திக்­கக்கூடா­து­ என்­று­தான் நான் விரும்­பு­கி­றேன்.”என்­று­ த­மிழ்­நாட்­டின் தின­ம­லர் பத்­தி­ரி­கைக்­குத் ­தெ­ரி­வித்­தார் பே­ரா­சி­ரி­யர் கா.சிவத்­தம்பி. இருப்­பி­னும் தமிழ் உணர்­வா­ளர்­கள் பலர் இந்­த­ ம­ா­நாட்­டைப் புறக்­க­ணித்­தார்­கள். மா­நா­டு­ சி­றப்­பு­ற­ ந­டை­பெற்­றது. உல­கச் செம்­மொ­ழி­ மா­நா­டும் தமிழ் வளர்ச்­சி­யில் முக்­கி­ய­மா­ன­ ப­தி­வா­கி­யது.

செம்மொழி மாநாட்டுக்கான
பாடல் பல்வகைச் சிறப்புக்கள் கொண்டது
அப்­போது, செம்­மொ­ழி­ மா­நாட்­டுக்­கா­ன­ பா­ட­லொன்­றும் வௌியிடப்­பட்­டது. அந்­தப் பாட­லை­ எ­ழு­தி­ய­வர் கலை­ஞர் மு.கரு­ணா­நிதி.அவரது பாடல் வரி­க­ளுக்கு ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­ய­மைத்­துள்­ளார். முன்­ன­ணிப்­ பா­ட­கர்­கள் இணைந்­து ­பா­டி­யுள்­ளார்­கள். திரைப்­பட இயக்­கு­நர் கௌ தம் மேனன் பாட­லுக்­கா­ன­ காட்­சி­ க­ளை­ இ­யக்­கி­யி­ருந்­தார். இந்­தப் பா­டல் செம்­மொ­ழி­ ம­ா­நாட்­டின் முத்­தாய்ப்­பாய் இருந்­தது. கரு­ணா­நி­தி­யின் பாடல் வரி­கள் அற்­பு­த­மா­ன க­ருத்­துக்கள் செறிந்­த­வை­யா­க­ இ­ருந்­தன.

பிறப்­பொக்­கும் எல்­லா­உ­யிர்க்­கும் –
பிறந்­த­பின்­னர்,யாதும் ஊரே,
யாவ­ரும் கேளிர்!
உண்­ப­து­நா­ழி­உ­டுப்­பது இரண்டே
உறை­வி­டம் என்­ப­து­ ஒன்­றே­யென
உரைத்­து­வாழ்ந்­தோம்
உழைத்­து­வாழ்­வோம்.

தீதும் நன்­றும் பிறர் தர­வா­ரா­
எ­னும் நன் மொழி­யே­நம் பொன் மொழி­யாம்! போரைப் புறம் தள்ளி
பொரு­ளைப் பொது­வாக்­கவே
அமை­தி­வ­ழி­காட்­டும் அன்­பு­மொழி அய்­யன் வள்­ளு­வ­ரின் வாய்­மொ­ழி­யாம்!

ஓர­றி­வு­மு­தல் ஆற­றி­வு­உ­யி­ரி­னம்
வரை­யிலே உணர்ந்­தி­டும்
உட­ல­மைப்­பை­ப் ப­குத்­துக் கூறும்
ஒல்­காப் புகழ் தொல்­காப்­பி­ய­மும்
ஒப்­பற்­ற­ கு­றள் கூறும் உயர் பண்­பாடு
ஒலிக்­கின்­ற­ சி­லம்­பும்,மேக­லை­யும்
சிந்­தா­ம­ணி­யு­ட­னே­ வ­ளை­யா­ப­தி­
குண்­ட­ல­கே­சி­யும் செம்­மொ­ழி­யா­ன­
நம் தமிழ் மொழி­யாம்!

அக­மென்­றும் புற­மென்­றும் வாழ்வை
அழ­கா­க­வ­குத்­த­ளித்து ஆதி­அந்­த­மி­லாது இருக்­கின்ற இனி­ய­மொழி-
ஓதி­வ­ள­ரும் உயி­ரா­ன­உ­ல­க­மொழி-
நம் மொழி­, நம் மொழி-­­ அ­துவே
செம்­மொ­ழி­செம்­மொழி – நம் தமிழ் மொழி­யாம்! வாழி­ய­வா­ழி­யவே! வாழி­ய­வா­ழி­யவே! வாழி­ய­வா­ழி­யவே!

பாட­லின்­காட்­சி­கள் . ‘அக­ர­ மு­த­ல­ எ­ழுத்­தெல்­லாம்’ என்­று­ ஆரம்பமாகின்றன. பின்­னர் கணி­னி­ மற்­றும் அலை­பே­சி­யில் தமிழ் என்­று­ வி­ரிந்­து ­செல்­கின்றன.

(தொட­ரும்)

You might also like