side Add

கடந்த வருடத்தில் 311 யானைகள் உயிரிழப்பு!!

கடந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 311 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் காட்டு யானைகள் தாக்கி 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த யானைகளில் 48 யானைகள், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளன.

அத்துடன் 29 யானைகள் தொடருந்து மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தன என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் வரை ஆயிரத்து 445 யானைகள் உயிரிழந்துள்ளன.

You might also like