கடைகள் மீது தாக்குதல்!!

கிளிநொச்சி பளை பொது பேரூந்து நிலையத்தின் கீழ் உள்ள கடைகளின் கண்ணாடிகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் கீழ் பகுதியில் கண்ணாடிகளால் அமைக்கப்பட்ட இரண்டு கடைகள் காணப்படுகின்றன.

குறித்த கடைகளை எவரும் வர்த்தக நடவடிக்கைக்காக எடுக்காத நிலையில், தொடர்சியாக அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் இரவில் பேருந்து நிலையத்துக்கு வரும் சிலர் இந்த அடாவடியில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like