கட்டங்கள் திணைக்களத்தின் அசமந்தப் போக்கு!!

வவுனியா பூங்கா வீதியின் போக்குவரத்து கட்டடங்கள் திணைக்கள ஊழியர்களின் அசமந்தபோக்கினால் பல மணிநேரம் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

திணைக்களத்தின் வளாகத்தினுள் காணப்படும் மரமோன்றின் கிளைகள் எவ்வித பாதுகாப்பு மற்றும் வீதித்தடையை பிரயோகிக்காது தறித்து வீழ்த்தப்பட்டன.

இதன் காரணமாக பூங்கா வீதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. வீதியின் முடிவில் எவ்வித சமிச்சைகளும் பிரயோகிக்காமையினால் குறித்த பாதையுடாக பயணித்த வாகனங்கள் பாதையின் முடிவு வரை பயணித்து மீண்டும் பின்நோக்கி சென்றதை அவதானிக்க முடிந்தது.

You might also like