கட்டுப்பாட்டை இழந்த ஹன்ரர்- மின்கம்பத்துடன் மோதி விபத்து!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹன்ரர் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிறது. அதில் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாகவுள்ள மின்கம்பத்துடன் வாகனம் மோதியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

You might also like