கதாநாயகனாகும் யோகி பாபு!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு நாயகனாக நடிக்கவுள்ள புதிய படம், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்துடன் மோதவுள்ளது.

கிட்டத்தட்ட 18 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, தற்போது காமெடி கலந்த கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவமளித்து வருகிறார்.

சென்ற வாரம் இவர் கதாநாயகனாக நடித்த ‘தர்மபிரபு’ படத்தின் டீசர் வெளியானது. மே மாதம் வெளிவரவுள்ள இப்படத்தை தொடர்ந்து, ‘கூர்கா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம் பூசையுடன் தொடங்கியுள்ளது.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க, ராஜசேகர் இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீசாகும் என தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநாளில் தான் ரஜினியின் தர்பார் படமும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like