side Add

கிராஞ்சி கிரா­மத்­துக்கு மின்­சா­ர- இணைப்பு பெற்­றுத்­தர கோரிக்கை!!

கிராஞ்சிப் பகு­தி­யில் மின்­சார இணைப்புக்­கள் வழங்­கப்­ப­டாத கார­ணத்­தால் பல குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக த் தெரி­விக்கப் ப­டு­கின்­றது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பூந­கரி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உட்­பட்ட கிராஞ்சி, பிருந்­தா­வ­னம், முரு ­கன் கோவி­லடி போன்ற பகு­தி­க­ளில் இன்­ன­மும் மின்­சார இணைப்­பு­கள் வழங்­கப்­ப­டாது மக்­கள் பல்­வேறு சிர­மங்­க­ளின் மத்­தி­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

மீள்­கு­டி­ய­மர்வு செய்­யப்­பட்டு 8 வரு­டங்­கள் ஆகின்­ற­போ­தும் இது­வரை தமக்­கான மின்­சார இணைப்­பு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை என­வும் இத­னால் சிறு­வர்­கள் முதல் பெரி­ய­வர்­கள்­வரை பல்­வேறு கஸ்­டங்­களை அனு­ப­விப்­ப­தாக தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பாக பூந­கரி பிர­தேச சபை அமர்­வு­கள் மற்­றும் அண்­மை­யில் இடம்­பெற்ற பூந­கரி பிர­தேச அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டங் க­ளில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்­பாக கிளி­நொச்சி மாவட்ட மின்­சார சபை­யி­ன­ரி­டம் கேட்­ட­போது,  ‘குறித்த முறைப்­பாட்­டுக்கு அமைய கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் குறித்த கிரா­மங்­க­ளுக்­குச் சென்று பார்­வை­யிட்­டோம். 17 வீடு­கள் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றில் அதில் 12 வீடு­கள் இணைப்­புக்­களை வழங்க கூடிய நிலை­யில் இருக்­கின்­றன. அவற்­றுக்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன’ என்று தெரி­வித்­த­னர்.

You might also like
X