கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சக்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கொடிகாமம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படவேண்டிய கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு கொடிகாமத்திலுள்ள சாவகச்சேரி பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

தென்மராட்சி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சி.சிவகுமாரன், யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சி.உதயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்வில் கிராமம் சம்பந்தமான தேவைகள், பிரச்சினைகள், சமூக பொருளாதார தரவுகள் ஆய்வுகள் செய்யப்பட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டன.

You might also like