‘கிளிநொச்சி மாவட்ட அரங்க மரபு’ நூல் வெளியீடு!!

ச.யேசுதாசன் எழுதிய ‘கிளிநொச்சி மாவட்ட அரங்க மரபு’ எனும் நூல், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
காவேரி கலாமன்ற நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லெபோறா ஜீவமலர் நூலின் வெளியீட்டுரையை ஆற்றினார்.
நூலினை அரங்கச் செயற்பாட்டாளரும், கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளருமாகிய செ.விந்தன் வெளியிட்டு வைக்க, சிவனருட்செல்வன் அரிசி ஆலை உரிமையாளர் பி.ஞானசம்மந்தன் முதற்பிரதி பெற்றுக்கொண்டார்.

You might also like