side Add

குடாநாட்டினது பதற்றநிலமை -தணிவதற்கு வாய்ப்பில்லையா?

குடா­நாட்­டில் பதற்­றம் கலந்த அச்­ச­மான சூழ்­நிலை தொடர்­வ­தால் மக்­கள் பீதி­யு­டன் பொழு­தைக் கழிக்க வேண்­டிய நிலை­யில் உள்­ள­னர். கொக்­கு­வில் பகு­தி­யில் ஏரா­ள­மான இளை­ஞர்­கள் பட்­டப்­ப­கல் வேளை­யில் வாள்­க­ளு­டன் தாக்­கு­த­லுக்­குத் தயா­ராக வந்­தமை குடா­நாடு எத்­த­கைய ஆபத்­தான நிலை­யில் உள்­ள­தென்­பதை எடுத்­துக்­காட்­டி­விட்­டது.

அர­சின் அச­மந்­தத்­தால்
அதி­க­ரிக்­கும் குற்­றங்­கள்
குடா­நாட்­டின் பாது­காப்பை உறு­தி­செய்­யப்­போ­வ­தாக அர­சின் சார்­பில் பாது­காப்பு அதி­கா­ரி­கள் அடிக்­கடி கூறி­வ­ரு­கின்­ற­போ­தி­லும் குற்­றச் செ­யல்­கள் தொடர்ந்தும் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. மக்­க­ளும் பீதி­யில் உறைந்­து­போய்க் கிடக்­கின்­ற­னர். குடா­நாடு பெரிய நிலப் ப­ரப்­பைக் கொண்­ட­தொரு இட­மல்ல. அங்கு பாது­காப்பை உறு­தி­செய்­வது சிர­ம­மா­ன­தொரு காரி­ய­மு­மல்ல. ஆனால் ஏதோ­வொரு கர­ணத்­தால் குற்­றச் செயல்­களை அங்கு தடுத்­து­நி­றுத்த முடி­ய­ வில்லை.

இங்கு குற்­றச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் இள­ வ­ய­தி­ன­ரா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். தாம் தாக்­கு­த­லுக்கு வரு­கி­றோம் என்று பகி­ரங்­க­மாக அறி­வித்­து­விட்டு வரு­ம­ள­வுக்கு அவர்­க­ளுக்­குத் துணிச்­சல் எவ்­வாறு வந்­த­தென்­பது ஆரா­யப்­பட வேண்­டி­ய­தொரு விட­ய­மா­கும். இவர்­க­ளுக்கு விலை­யு­யர்ந்த உந்­து­ளி­கள் எவ்­வாறு கிடைத்­தன? வாள்­கள் போன்ற பயங்­க­ர­மான ஆயு­தங்­கள் எங்­கி­ருந்து பெறப்­பட்­டன? என்­பன ஆரா­யப்­பட வேண்­டிய விட­யங்­க­ளா­கும். தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் மட்­டு­மல்­லாது திருட்டு, கொள்ளை ஆகி­ய­ன­வும் அடிக்­கடி இடம்­பெ­று­வ­தைக் காண­மு­டி­கின்­றது. வீடு­க­ளில் தனித்து வாழ்­ப­வர்­கள் குறி­வைக்­கப்­பட்டு கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன.

இந்­தச் சம்­ப­வங்­க­ளின்­போது அவர்­கள் மோச­மான தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. குடா­நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் மக்­க­ளின் பாது­காப்பை உறு­தி­செய்­யக்­கூ­டிய எண்­ணிக்­கை­யில் ஒவ்­வொரு பகு­தி­யி­லும் பொலிஸ் நிலை­யங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றைத் தவிர அதி­க­ள­வான இரா­ணு­வத்­தி­ன­ரும் முகா­மிட்­டுள்­ள­னர். இவை அனைத்­தை­யும் மீறி ஒரு சிறிய குழு­வி­னர் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. சட்­டம் மற்­றும் ஒழுங்கு தொடர்­பான அமைச்­சைத் தம்­வ­சம் எடுத்து வைத்­தி­ருக்­கும் அரச தலை­வர் இதில் உட­ன­டி­யா­கக் கவ­ன­மெ­டுத்­துக் குடா­நாட்­டின் அமை­தியை உட­ன­டி­யாக உறு­தி­செய்­து­கொள்ள வேண்­டும்.

கல்­வி­யில் பெரும் பின்­ன­டைவு
அண்­மை­யில் வெளி­யான க.பொ.த. உயர்­த­ரப் பரீட்சை முடி­வு­க­ளின் பிர­கா­ரம் தமிழ் மாண­வர்­கள் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ள­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. இத­னால் தமி­ழர்­க­ளின் எதிர்­கா­லமே பாதிப்பை எதிர்­கொள்­ளப்­போ­கின்­றது. கல்­வி­யில் பின்­ன­டைவு ஏற்­ப­டு­மா­யின் அது பல துறை­க­ளி­லும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டு­மென்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.

உரிய தொழில்­வாய்ப்­பின்­மை­யும் இளை­ஞர்­கள் தவ­றான வழி­க­ளில் செல்­வ­தற்­குக் கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது. போரின் பின்­னர் தொழில் வாய்ப்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யி­லான செயற்­றிட்­டங்­கள் எவை­யுமே இங்கு வகுக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. போரின் கார­ண­மாக அழி­வ­டைந்த தொழிற்­சா­லை­க­ளும் சீர­மைக்­கப்­ப­டாது கைவி­டப்­பட்ட நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. அரசு மாற்­றான்­தாய் மனப்­பான்­மை­யு­டன் செயற்­ப­டு­வ­தையே இது தெட்­டத் தெளி­வாக்க காட்­டு­கின்­றது.

இந்த நிலை தொட­ரு­மே­யா­னால் தமிழ் இளை­ஞர்­கள் அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்­தெழ வேண்­டிய நிலை­யொன்­றும் உரு­வா­கி­வி­ட­லா­மென்­பதை மறுத்­து­விட முடி­யாது.

தமிழ் அர­சி­யல் வாதி­கள் குடா­நாட்டு இளை­ஞர்­கள் தொடர்­பா­கக் கூடிய கவ­னம் செலுத்­த­வேண்­டும். தவ­றான பாதை­யில் செல்­கின்ற இளை­ஞர்­க­ளுக்கு நல்­வ­ழி­காட்­டு­வ­தற்­கான திட்­டங்­களை வகுத்து அவர்­கள் செயற்­பட வேண்­டும். வெறு­மனே பண்­பாடு, கலா­சா­ரம் எனப் பழைய பெரு­மை­க­ளைக் கூறிக்­கொண்­டி­ ருப்­ப­தால் எந்­த­வி­த­மான நன்­மை­யும் கிடைத்­து­வி­டா­ தென்­பதை இங்­குள்­ள­வர்­கள் முத­லில் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

You might also like