side Add

குறிஞ்­சிக் கும­ரன் விளை­யாட்­டுக் கழக அணி வெற்றி!!

குறிஞ்­சிக் கும­ரன் விளை­யாட்­டுக் கழ­கத்­துக்­கும், ஆனைக்­கோட்டை யூனி­யன் விளை­யாட்­டுக் கழ­கத்­துக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் சம­நிலை தவிர்ப்பு உதை மூலம் குறிஞ்­சிக் கும­ரன் விளை­யாட்­டுக் கழக அணி வெற்றி பெற்­றது.

வடக்கு மாகாண உடற்­கல்வி டிப்­ளோமா ஆசி­ரி­யர் சங்­கம் நடத்­தும் அழைக்­கப்­பட்ட கால்­பந்­தாட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான, அணி­க­ளுக்கு 7 பேர் பங்­கு­பற்­றும் வில­கல் முறை­யி­லான தொட­ரின் ஆட்­டங்­கள் உரும்­பி­ராய் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றன.
இரண்­டா­வது ஆட்­டத்­தில் குறிஞ்­சிக்­கு­ம­ரன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஆனைக்­கோட்டை யூனி­யன் விளை­யாட்­டுக்­க­ழக அணி மோதி­யது.

விறு­வி­றுப்­பாக நகர்ந்த முதல்­பாதி ஆட்­டத்­தின் 19ஆவது நிமி­டத்­தில் ஆனைக்­கோட்டை யூனி­யன் விளை­யாட்­டுக் கழக வீரர் அபி முத­லா­வது கோலை தனது அணிக்­கா­கப் பதிவு செய்­தார். முதல்­பாதி ஆட்­டம் நிறை­வில் ஆனைக்­கோட்டை யூனி­யன் அணி முன்­னிலை பெற்­றது.

இரண்­டா­வது பாதி ஆட்­டம் ஆரம்­ப­மா­னது. ஆட்­டத்­தின் 17ஆவது நிமி­டத்­தில் ஆனைக்­கோட்டை யூனி­யன் விளை­யாட்­டுக் கழக அணி தனது இரண்­டா­வது கோலை வெற்­றி­க­ர­மா­கப் பதிவு செய்­தது. இந்­தக் கோலை மதி தனது அணிக்­கா­கப் பெற்­றுக் கொடுத்­தார். பதி­லுக்கு கோல் அடிப்­ப­தில் முனைப்­புக் காட்­டிய குறிஞ்­சிக்­கு­ம­ரன் விளை­யாட்­டுக்­க­ழக அணி 38 ஆவது நிமி­டத்­தில் தனது முத­லா­வது கோலைப் பதிவு செய்­தது.

அந்த அணி வீரர் கஜந்­தன் அதனை அடித்­தார். ஆட்­டம் நிறைவை நெருங்­கிக் கொண்­டி­ருந்­தது. யூனி­யன் விளை­யாட்­டுக் கழ­கம் முன்­னி­லை­யில் இருந்­தது. ஆட்­டம் முடி­வ­தற்கு சில நிமி­டங்­கள் இருக்­கை­யில் குறிஞ்­சிக்­கு­ம­ரன் அணி வீரர் ராசா தனது அணி சார்­பில் இரண்­டா­வது கோலைப் பதிவு செய்து ஆட்­டத்­தின் போக்கை மாற்­றி­விட்­டார். நிர்­ண­யிக்­கப்­பட்ட நேர முடி­வில் இரண்டு அணி­க­ளும் 2:2 என்ற கோல் கணக்­கில் இருந்­தது.

வெற்­றி­யைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக சம­நிலை தகர்ப்பு உதை வழங்­கப்­பட்­டது. 7:6 என்ற கோல் கணக்­கில் குறிஞ்­சிக்­கு­ம­ரன் அணி வெற்றி பெற்றது.

You might also like