சண்டைப் பயிற்சி எடுத்த எமி ஜாக்சன்!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருள்செலவில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்தியளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், நாளை வெளியாகிறது.

‘2.0’ படத்துக்காக சண்டைப் பயிற்சி எடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

“2.0 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, சிறந்த சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் சென்னைக்கு வந்து சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சி தந்தனர். எங்கள் முதல் பயிற்சியின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. எனது தவறுகள் என்னெனன என்பதைப் பார்த்து திருத்திக் கொள்ள ஸ்லோமோஷனில் படம் பிடித்தோம்” எனத் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன்.

You might also like