சரவணன் இயக்கத்தில் ஆர்யாவின் அடுத்த படம்!!

‘மரகத நாணயம்’ இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாணயம்’. 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம்
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் புதிய படத்தை சரவணன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு பிரச்சினைகளால் அப்படம் தொடங்கப்படவில்லை. இதனால், சரவணனின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியானது.

இறுதியாக, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அப்படத்தை தயாரிக்க முன்வந்தது. தற்போது அதில் நாயகனாக நடிக்க ஆர்யா சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் தொடர்பான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like