side Add

சவேரியார் பெண்கள் பாடசாலையின் வீதியோட்டம்!!

மன்னார்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி(மரதன்) நேற்று நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கில்டா சிங்கராயர் குறித்த வீதி ஓட்டப்போட்டியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு முன் ஆரம்பமான வீதி ஓட்டப்போட்டி பிரதான வீதியூடாக மன்னார் வைத்தியசாலை எழுத்தூரினை சென்றடைந்து.

அதனைத்தொடர்ந்து தலை மன்னார் 2ஆம் கட்டைப் பகுதியால் திரும்பி மன்னார் நகரப்பகுதிக்கு பஸார் பகுதியைச் சென்றடைந்து பொலிஸ் நிலைய வீதியூடாகச் சென்று மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது.

வீதி ஓட்டப்போட்டியில் 1 ஆம் இடம் ஜே.ஜெனிபர்- , 2ஆம் இடம் ஜே.ஜெனி , 3 ஆம் இடம் ஏ.அனுசியா- ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

You might also like