சாதனை மாணவர்கள் கௌரவிப்பு!!

மன்னார் பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையில் 2018 சாதாரணதரத்தில் ஒன்பது ஏ சித்தி மற்றும் திறமையான பெறுபேறுகள் பெற்று சித்தியடைந்த மணவர்கள் இன்று மதிப்பளிக்கப்பட்டனர்.

முதலாம் இடம் பெற்ற மாணவிக்கு நினைவுச் சின்னமும் பத்தாயிரம் ரூபா பணமும், ஒரு துவிச்சக்கர வண்டியும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற மாணவனுக்கு நினைவுச் சின்னமும், ஏழாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.மேலும் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஜே.பிரட்லி, நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி, அருட்சகோதரர்கள், பங்குத்தந்தையர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like