side Add

‘சாயிட் சிட்டி’ கிராமம்- மக்களிடம் கையளிப்பு!!

மன்னார் -தலை மன்னார் பிரதான வீதி இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள், இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டன.

‘சாயிட் சிட்டி’ எனும் கிராமம் அமைக்கப்பட்டு அங்கு பள்ளிவாசல், 120 வீடுகள் மற்றும் பொது மண்டபம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் டுபாய் நாட்டின் தனவந்தர் ‘அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா’ மற்றும் அவருடைய குழுவினர் இணைந்து வீடுகளைக் கையளித்தனர்.

சுமார் 120 முஸ்ஸிம் குடும்பங்களுக்கு டுபாய் நாட்டின் தனவந்தர் ‘அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா’ வின் நிதி உதவியுடன் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

You might also like