செஞ்சோலை நினைவுத்தூபியில்- கொல்லப்பட்ட மாணவர்களின் படங்களுக்கு தடை!!

செஞ்சோலை படுகொலை நினைவாக கிளிநொச்சி வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தூபி அமைக்கும் பணிகளை முன்னெடுத்தவர்கள் சிலர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14.08.19 அன்று 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கடைப்பிடிக்கவுள்ள நிலையில், தூபி அமைக்க வழங்கப்பட்ட அனுமதி காலம் முடிவடைந்த நிலையில், தூபியினை அமைக்கும் பணிளை முன்னெடுத்து வருபவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

You might also like